முல்லைச் சிறார்களைக் கொன்றுவிட்டு அவர்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் சுனாமி காலத்தில் கைகொடுக்க வந்திருந்த உதவியாளர்களை குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுதள்ளியுள்ள் சிங்கள அரசின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தீவிரவாத நாடான பாகிஷ்தான் மனித உரிமைக்கு சற்றும் மதிப்பு கொடுக்காத இலங்கை அரசிற்கு ஆயுத உதவி அளிப்பதைக் கண்டிக்கிறோம்.
தமிழர்களின் பணத்தில் மட்டுமே குறியாய் அலையும் தமிழ் சினிமாக் கூத்தாடிகள் ஈழத்தில் தமிழ்ச் சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் குழந்தைகள் கூண்டோடு அழிக்கப்படுவதைப் பற்றி அறிக்கை ஏதும் விடாமல் வாழாயிருப்பதைக்க் கண்டிக்கிறோம். இவர்களுக்கு, ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும் தங்கள் படங்கள் ஓடுவதற்கு வழி செய்யும் இயந்திரங்கள் மட்டும் தானோ; இதே ரசிகர்களின் இனம் தானே இருபது மைல்களுக்கு தெற்கே வதைபடுகின்றது.
இந்திய நடுவணரசு இலங்கை அரசின் மனித உரிமை மீரல்களை சர்ச்சையைக் கிளப்பி உலக அரங்கில் அம்பலப்படுத்தாமல் இருப்பதைக் கண்டிக்கிறோம். "All evil requires to flourish is for good people to do nothing."
மேற்கூறிய அத்தொடர் அமைதி பூண்டிருக்கும் அமெரிக்கா உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளுக்கும் பொருந்த்தும்.
Wednesday, August 30, 2006
Subscribe to:
Comments (Atom)
